• முகப்பு
  • சினிமா

அதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது

காஞ்சனா 2, ஓகே கண்மணி, 24, முடிஞ்சா இவன பிடி படங்களில் நடித்துள்ளவர் நித்யாமேனன். கடைசியாக கடந்த ஆண்டு தமிழில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார்.

தற்போது தமிழில் அவருக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை. தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

புதிய பட வாய்ப்புகள் வரும்போது நித்யா மேனன் பல நிபந்தனைகள் விதிப்பதுடன், சம்பளத்தை உயர்த்தி கேட்பதால் தயாரிப்பாளர்கள் வேறு ஹீரோயினை தேடிச் செல்கின்றனர்.

சமீபத்தில் தெலுங்கில் சர்வானந்த் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நித்யாவிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர் சுதீர் வர்மா. இந்த கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் எண்ணியிருந்தார்.

கதையை கேட்டு நடிக்க முன்வந்த நித்யாமேனன் ரூ.75 லட்சம் சம்பளம் கேட்டார். அதைக்கேட்டு இயக்குனரும், தயாரிப்பாளரும் ஷாக் ஆகினர்.

ஏற்கனவே இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால் அவருக்கே பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட வேண்டியிருந்தது.

மற்றொரு கதாநாயகிக்கும் பெரிய சம்பளம் தருவது கடினம் என தயாரிப்பாளர் ஜகா வாங்கினார். இதையடுத்து நித்யாமேனனிடம் மீண்டும் கால்ஷீட்பற்றி பேசாமல் அவருக்கு பதிலாக கல்யாணி என்ற நடிகையை தேர்வு செய்தனர்.

இவர் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொண்டார். வந்த வாய்ப்பு கைநழுவியதால் நித்யாமேனன் அப்செட் ஆனார்.