• முகப்பு
  • இலங்கை செய்திகள்

அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு

தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்கு உரிய ஆணையைப் பெறும். அதற்கு அடுத்தபடியான ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே பிரதான எதிர்க்கட்சிப் பதவி கிடைக்கும். அந்தக் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் கூட்டரசிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமருமானால் மேற்படி இரு பதவிகளையும் அக்கட்சி கைப்பற்றிவிடும். எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், பிரதம கொறடாவாக தினேஷ் குணவர்தனவும் தெரிவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.