• முகப்பு
  • இலங்கை செய்திகள்

அரசியலில் நிகழப்போகும் அதிரடி மாற்றம்

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த தமது நிலைப்பாட்டை எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் சில தினங்களில் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சர் கபீர் ஹசீம் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புக்கள் நிவேற்றப்படவில்லை என்பதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.