• முகப்பு
  • இலங்கை செய்திகள்

இந்தியர் கைது

நுரைச்சோலை கரம்பைப் பகுதியில் கடல் அட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இந்தியர் ஒருவர்  நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். களஞ்சியப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதுடன், சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.