• முகப்பு
  • செய்திகள்

இந்திய ரசிகர் மீது புகார்

இந்தியா ரசிகர்கள் மீது தென்னாபிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் இனவெறி புகார் அளித்துள்ளார். இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் 4 ஆவது தொடர் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணிpன் 12 ஆம் நிலை வீரர் இம்ரான் தாஹிர் களம் இறங்காமல் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு தண்ணீர் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் போது இந்தியா ரசிகர்கள் சிலர் இம்ரான் தாஹிருக்கு இனவெறியுடன் திட்டியுள்ளதால் காவலில் நின்ற பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு உடனடியாக இந்தியா ரசிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.