• முகப்பு
  • உலகம்

இளவரசர் ஹென்றிக் மரணம்

டென்மார்க் நாட்டின் அரசி மார்கரெட்டின் கணவன் இளவரசர் ஹென்றிக் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.

டென்மார்க் நாட்டின் அரசியான மார்கரெட்டின் கணவன் (83 வயது) இளவரசர் ஹென்றிக் கடந்த சில மாதங்களாக மூளைக் கட்டி நோயாலும், உடல் நலக் குறைவாலும் அவதியுற்று, கோபன்ஹேகனில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், நேற்று உறக்கத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனால் இவர்களின் 2 மகன்களில் ஒருவரான பட்டத்து இளவரசனான பிரடெரிக், தென்கொரியா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள போதும் இறப்பு சம்பவத்தால் மீண்டும் டென்மார்க்கிற்கு திரும்பியுள்ளார்.