• முகப்பு
  • செய்திகள்

உலகின் உயர்ந்தவரைச் சந்தித்த குள்ளமானவர்

உலகின் உயரமான மனிதரை இந்தியாவை சேர்ந்த உலகின் குள்ளமான பெண் சந்தித்துள்ளார். எகிப்து சுற்றுலாத்துறை மேம்பாட்டு வாரியம் எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலகின் குள்ளமான மற்றும் உயரமான மனிதர்களை அழைத்துள்ளது. இதனடிப்படையில் எகிப்து சென்ற இந்தியாவில் உள்ள ஜோதி ஆம்கே என்னும் உலகின் குள்ளமான பெண் துருக்கியில் உள்ள சுல்தான் கோசென் என்னும் உலகின் உயரமான மனிதரை சந்தித்துள்ளார்.

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 25 வயதை உடைய ஜோதி ஆம்கே 2 அடி 6 அங்குலம் உயரத்துடன் உலகின் குள்ளமான பெண் என்ற உலக சாதனையை பெற்றுள்ளார். அதேபோல் துருக்கியில் உள்ள சுல்தான் கோசென் 8 அடி 9 அங்குலம் உயரத்துடன் உலகின் உயர்ந்த மனிதர் என்னும் கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.