• முகப்பு
  • உலகம்

ஊழல் வழக்கு : தீர்ப்பு நிறைவேற்றம்

தென்கொரியாவில் அதிபராக இருந்து வந்தவர் பெண் தலைவர் பார்க் கியுன் ஹை. இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். தென் கொரிய அரசில் சோய் சூன் சில் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கினார். அதைக் கொண்டு அவர் பல்வேறு ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டு அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அதிபராக இருந்த பார்க் கியுன் ஹையுக்கும் சிக்கல் எழுந்தது. அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரது தோழி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சோய் சூன் சில் மீதான ஊழல் வழக்கை சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.