• முகப்பு
  • இலங்கை செய்திகள்

எதிர்பாராத கூட்டணியால் பதற்றம்

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று மாலை ஒன்றிணைந்துள்ளனர் .

நேற்று ஹட்டனில் இடம்பெற்ற பேரணியின் போது முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவர்களோடு இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக ஆறுமுகன் தொண்டமான் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.