• முகப்பு
  • இலங்கை செய்திகள்

எமது ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது

340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் சுதந்திரக் கட்சியினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எமது ஆதரவு இன்றி எந்தக் கட்சிக்கும் இந்த சபைகளில் ஆட்சியமைக்க முடியாது எனவும் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இது வரை எந்த தரப்புடனும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

167 சபைகளில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க ஆதரவு இன்றி ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் எந்த கட்சியுடனும் உடன்பாடு காணப்படவில்லை என்றார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளில் பொதுஜன பெரமுன 231 சபைகளிலும் ஐ.தே.க 34 சபைகளிலும் வெற்றியீட்டின. இவற்றில் பாதி சபைகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் வேறு கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது