• முகப்பு
  • இந்திய செய்திகள்

சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் திறப்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மற்ற தலைவர்களின் படங்களைப் போன்று 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஜெயலலிதா படம் சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. பச்சை நிற சேலையுடன் ஜெயலலிதா நிற்பது போன்று அவரது உருவப்படம் வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாசகமான அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெயல லிதாவின் உருவப்படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் ஒவியமாக வரைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு நேர்எதிரே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.