• முகப்பு
  • இலங்கை செய்திகள்

சிறுவர் இல்லத்திற்கு தீ வைப்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாக்கஸ் தோட்டபகுதியில் உள்ள சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் நேற்று திங்கட்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீ வைப்புச் சம்பவச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்தனை பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தீ வைக்கபட்ட சிறுவர் நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும், தும்பு சேரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

குறித்த தோட்டப் பகுதியில் உள்ள சிறுவர் பாரமரிப்பு நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டதினால் சிறுவர் நிலையத்திற்கு முன்பாக அமைக்கபட்ட நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்துள்ள நிலையில் அந்த தோட்டபகுதி மக்களுக்கு குடிநீரை பெற்று கொள்வதில் பெறும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் தெரிவித்தனர் .