• முகப்பு
  • இந்திய செய்திகள்

சூட்கேசில் சிறுவனின் உடல்

இந்திய தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.

அதில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம் இருந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் குறித்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உறவினர் அவிதேஷ் என்பவரை பொலிசார் கைது செய்து உள்ளனர். அவிதேஷ் சிறுவனை கடத்திக் கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து உள்ளார். அவிதேஷ் ஒரு யு.பி.எஸ்.சி தேர்ச்சி பெற்றவர். சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருவதாக கூறி உள்ளார். குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு அந்த குடும்பத்துடன் இருந்தே நாடகமாடி உள்ளார். புகார் கொடுப்பதிலும் குழந்தையை தேடுவது போல் நடித்தும் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.