• முகப்பு
  • உலகம்

நகரங்களை மறுசீரமைக்க நடவடிக்கை

ஈராக்கில் போரால் சேதமடைந்து நகரங்களை மறுசீரமைக்க 88 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

சிரியாவை மையமாக கொண்டு செயற்பட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பல தொகை மக்களை கொன்று குவித்துள்ளதுடன் நகரங்களையும் சேதமாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது சர்வதேச படைகளின் உதவியுடன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இதனால் தற்போது ஈராக்கை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதால், இதற்கு 88 பில்லியன் அமெரிக்கா டொலர் செலவாகும் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது.