• முகப்பு
  • இலங்கை செய்திகள்

நல்லாட்சியை ஆராய புதிய குழு

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டுச் செல்வது தொடர்பில் ஆராயக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இதுதொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 5 உறுப்பினர்களையும் கொண்டதாக அந்த குழு அமைக்கப்பட்டுள்ள போதும்,  இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.