• முகப்பு
  • இலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தலுக்கு வழிவகுப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேற்றை கருத்திற் கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் வரை தொடர்ந்தது. மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேர்தல் பெறுபேற்றுக்கு அமைய தமக்கு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அது போல சபாநாயகர் கருஜயசூரியவை பிரதமராக பெயரிட்டு அரசாங்கத்தை பொறுப்பேற்பதாக அந்த கலந்துரையாடலின் போது யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைத்துப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்த மாற்று வழியாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.