• முகப்பு
  • செய்திகள்

பட்டம் பெற்ற பாட்டி

கல்வி கற்பதற்கு வயதெல்லை இல்லை என பலர் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஷியுமின்சூ என்ற 81 வயது பெண் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் படித்துப் பட்டம் பெற்று சாதனை செய்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழக படிப்கை ஆரம்பித்த பெண் 4 வருட முயற்சியில் படித்து பட்டத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்டம் பெற்ற பெண் கூறியதாவது, “நேரில் சென்று நானே பட்டத்தை பெற்றதில் பெருமை அடைகின்றேன். 81 வயது பெண் நானே படித்து பட்டம் பெறும் போது இளைஞர்களால் பல சாதனைகள் நிகழ்த்த முடியும். மேலும் இப்பட்டத்தை பெறுவதற்காக உடல் அளவில் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 81 வயது மூதாட்டியின் முயற்சி பல இளைஞர்களது மனதில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளது என கூறப்பட்டுள்ளது.