• முகப்பு
  • மருத்துவம்

பற்களைக் கடிப்பவரா நீங்கள்? நெருங்கி வரும் பேராபத்து

நாம் உண்ணும் உணவுகளால் ஒட்டுண்ணிகள் வளர்கின்றன. இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை நம்மை அழிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இந்த புழுக்கள் இருந்தால் இருக்கும் அறிகுறிகள், அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும், அது உங்களது குடற்சுவர்களை அழிக்க நேரிடும். வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும்.

ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இந்த பிரச்சனை குறையும். மேலும், நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தும், உங்களுக்கு பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒட்டுண்ணிகள் சிறுகுடலின் மேல் வளர்ந்து, உட்புற சுவரை அரிக்கும். கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தும். புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை இறுக்கமாகக் கடிக்கும் பழக்கம் உருவாகும். ஏனெனில் உடலில் இனபெருக்கம் அதிகரித்த புழுக்களின் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும். சோர்வும், மன அழுத்தமும் உண்டாகும். அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களை இறுக்கமாக கடிக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.