• முகப்பு
  • உலகம்

பாராளுமன்றத்திற்குள் புயல்

புயல் காற்று தாக்கத்தினால் ரொங்கா நாட்டு பாராளுமன்றத்திற்கு பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான புயல் காற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. இப்புயலினால் ரொங்கா நாடு பாரிய சேதங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்புயலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டிருப்பதுடன் பசுபிக் பிராந்திய வலய நாடாகையால் அங்கு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.