• முகப்பு
  • சினிமா

பிரியா வாரியருக்கு எதிராகப் புகார்

ஒரே நாளில் மில்லியன் கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மாணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக ஹைதராபாத்தின் ஃபலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாணிக்யா மலரய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது. இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் உள்ளது. எனவே இந்த பாடலில் நடித்த பிரியா மற்றும் பாடலை இசையமைத்து எழுதியவர்கள் மீதும், பாடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் இளைஞர்களின் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.