• முகப்பு
  • இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலுக்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலை நடத்த முன்வருவாரானால் அதற்கு நாடாளுமன்றத்தில் தேவையான  ஒத்துழைப்பை வழங்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று கூடிய மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி  பெற்றதைத்   தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று கூடியது. கொழும்பு  விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  மகிந்த தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.