• முகப்பு
  • இலங்கை செய்திகள்

மகிந்தவின் விசேட அறிவிப்பு

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு  தெரிவிக்கையில், மக்களின் நிலைப்பாட்டுக்கு செவிசாய்த்து, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். அதேவேளை, தேர்தலில் நடுநிலையான செய்திகளை வழங்கியமைக்காக ஊடகங்கள், இணைய ஊடங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,  ஆயுட்காலம் முடிவடைந்த 3 மாகாணசபைகளின் தேர்தலையும் உடன் நடத்துமாறும்  தெரிவித்தார்.