• முகப்பு
  • செய்திகள்

மக்ஸ்வெல்லின் ஆட்ட மழையில் திணறிய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிய 2 ஆவது முத்தொடர் போட்டியிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் கடந்த 3 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிய முதலாவது முத்தொடர் போட்டியில் மழை காரணமாக டி.எல்.எஸ் முறையில் அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்றையதினம் 2 ஆவது முத்தொடர் போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளன. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலியா அணி சார்பில் 58 பந்துகளில் 103 ஓட்டங்களை கூடுதலாக பெற்ற மெக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.