• முகப்பு
  • சினிமா

மீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்

உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்திகப்பல், ஆட்ட நாயகன் படங்களில் நடித்திருப்பவர் மீரா வாசுதேவன். இவர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வாலை கடந்த 2005ம் ஆண்டு மணந்தார்.

பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் அனிஷ் ஜான் என்பவரை மணந்தார். அவரைவிட்டு பிரிந்து வாழ்கிறார்.

குடும்ப பிரச்னையால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த மீரா, கடந்த ஆண்டு சக்கர மாவின் கொம்பத்து மலையாள படத்தில் நடித்தார்.

தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தகவல் பரிமாறி வருகிறார் மீரா.

அப்போது சிலர் அவரை சீண்டிய வண்ணம் இருக்கின்றனர்.

விமல்குமார் என்ற இளைஞர் அடிக்கடி மீராவின் புகைப்படம் அருகில் ஆபாச கமென்ட் எழுதி அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்தார்.

அந்த இளைஞரின் ஆபாச கமென்ட்களை செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டு அதில் அறிவுரை வழங்கியிருக்கிறார் மீரா.

அதில் ‘ஆபாச கமென்ட்களை வெளியிடுவதற்கு இளைஞர் வெட்கப்பட வேண்டும். தேவையற்ற இதுபோன்ற கமென்ட்களை பகிர்வதற்கு பதிலாக அந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.