• முகப்பு
  • இந்திய செய்திகள்

முதல்வருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வேதன உயர்வு, ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து அரசாங்க போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு தமது ஆய்வரிக்கையை ஸ்டாலினிடம் கையளித்துள்ளது. இந்த நிலையில் இந்தக் குழுவின் அறிக்கையை வழங்குவதற்காக முதலமைச்சர் பழனிச்சாமியை, ஸ்டாலின் சந்திக்கிறார்.