• முகப்பு
  • இலங்கை செய்திகள்

முல்லையில் குண்டுவெடிப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று இரவு RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அதில் இருந்த இந்த குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பினால் அருகில் இருந்த பல வீடுகள் சேதடைந்துள்ள போதிலும், யாரும் காயமடையவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களினால் வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட குப்பை மேட்டில் குப்பை சேகரித்து அதற்கு தீ வைத்தபோதே குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிக்கும் சந்தர்ப்பத்தில் குப்பைக்கு தீ வைத்தவர் அங்கிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.