• முகப்பு
  • செய்திகள்

மேற்கிந்தியதீவின் வரலாற்றுப் போட்டியில் இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜுன் 23ம் திகதி முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜுன் மாதம் 6ம் திகதி ட்ரினிடேட்டில் நடைபெறவுள்ளது. தொடரின் மூன்றாவது போட்டி பார்படோசில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டி பகல் இரவுப் போட்டியாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியாகும். அதேநேரம் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு 10 ஆண்டுகளின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.