• முகப்பு
  • இலங்கை செய்திகள்

யாழ். மாநகரசபைக்கு புதிய மேயர்

யாழ். மாநகரசபையின் மேயராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் துணை மேயராக து. ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ். மாநகரசபைக்கான மேயரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் சூடு பிடித்திருந்த நிலையில், ஆர்னோல்ட் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவர்தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தாஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட்டை யாழ். மாநகரசபையின் மேயராக்குவதற்கு கட்சி உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.