• முகப்பு
  • இலங்கை செய்திகள்

லசந்த கொலை வழக்கு: பொலிஸ் மா அதிபர் கைது

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலைச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைத்ததாக குற்றம் சுமத்தி, குறித்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிரசன்ன நாணயக்காரவை நேற்றிரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.