• முகப்பு
  • உலகம்

வறியவர்களுக்கான சலுகைகள் நீக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது வரவு செலவுத் திட்டத்தை அந்த நாட்டின் மக்கள் காங்கிரஸிடம் முன்வைத்துள்ள நிலையில், அதனூடாக அந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் பல நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வறுமைக்கோட்டில் உள்ள அமெரிக்கருக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முத்திரை, சுகாதார காப்புறுதி மற்றும் வீட்டுச் சலுகைகள் என்பன நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சி செலவீனங்களுக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விண்வெளி மையம் தொடர்பான அமெரிக்காவின் ஒத்துழைப்பை குறைப்பதற்கும் ஜனாதிபதி ட்ரம்ப் யோசனை முன்வைத்துள்ளார். அதனை தனியார் மயப்படுத்துவதே ட்ரம்பின் விருப்பமாக உள்ளது.