• முகப்பு
  • இலங்கை செய்திகள்

வீழ்ச்சியடைந்த வாக்கு வங்கி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாக்கு வங்கி இம்முறை இடம்பெற்ற தேர்தலில் வீழ்ச்சியடைந்திருப்பதாக ஆளும் அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 577 இலட்சமாக இருந்த வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச இம்முறை இடம்பெற்ற தேர்தலில் 447 இலட்சமாக குறைவடைந்திருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்த மக்களை மட்டுமன்றி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்த 610 இலட்சம் மக்களினது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.