• முகப்பு
  • செய்திகள்

வெற்றியின் இரகசியம்: போட்டுடைத்தார் தவான்

இந்திய ஒருநாள் கிரிக்கட் அணி, எந்த நாட்டிலும் சிறப்பாக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக, அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணியின் இளைஞர்களும்,  நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களும் சரியான முறையில் சேர்ந்துள்ளனர். இதனால் எந்த அணியையும் இந்தியாவினால் வெல்ல முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்திய அணி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ணத் தொடரிலும் சிறப்பாக செயற்படக்கூடிய நிலையில் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.