• முகப்பு
  • உலகம்

வேட்டைக்காரனை வேட்டையாடிய சிங்கங்கள்

தென்னாபிரிக்காவில் வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரனைச் சிங்கங்கள் கொன்று உண்டுள்ளன. தென்னாபிரிக்காவில் லிம்போயா மாகாணத்தில் ஹோயட்ஸ் புருயிட் அருகே குரூஜெர் தேசிய பூங்கா உள்ளது. இப்பூங்காவில் ஏராளமான சிங்கங்கள் உள்ளதால் இவற்றைத் திருட்டு தனமாக வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். இதுபோன்று கடந்த 2013 ஆம் ஆண்டு லிம்போவில் இறந்த நிலையில் 3 சிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டுள்ளதால், சிங்கங்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த சிங்கங்களின் எலும்புகள் பாரம்பரிய மருந்துகளுக்கு பயன்படுத்துவதனாலேயே சிங்கங்கள் கொல்லப்படுகின்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.